Pages

Wednesday, February 11, 2015

காதல் தேவன் தந்த சாபம்

நினைவலைகள்
கால எந்திரமாய் - என்னை
இழுத்துச் சென்ற அந்நாளில்...
ஒவ்வொரு பெண்ணும் 
திரை நாயகனை
காதலனாக்கி கனவு கண்டனர்
கல்லுரி காலத்தே
வலிந்து வந்த காதலை
விலக்கியதால் -எனக்கு
காதல் தேவன் தந்த
கடுமையான சாபம் போல..
முப்பது பெண்களுக்கு பிறகு
பெண்பார்க்கு படலங்கள்
மூடத்தனமாய் பட்டது...
ஆனாலும் கல்யாண சந்தையில்
மிகுந்த மதிப்பெனக்கு
ஆம் நான் பார்க்கும் பெண்களுக்கு
சட்டெண்டு திருமணம் ஆனதால் - எனக்கோ
முதிர் கண்ணனாய்
முன் முடி கொட்டிது...
பெண்பார்க்கு படலங்கள்
முப்பதிலிருந்து ஐம்பத்தாகியும்
தேடுதல் வேட்டை
தீயாய் தொடர்ந்தது
தொப்பை தெரிகிறது என்றாள் ஒருத்தி
உடையில் நேர்த்தி தெரியவில்லை என்றாள் ஒருத்தி
வயது அதிகம் என்றாள் ஒருத்தி
உயரம் குறைவு என்றாள் ஒருத்தி
பின்புலம் இல்லை என்றாள் ஒருத்தி
அன்றொருநாள்
நடு முற்றத்தில் தேவதையாய் நீ
நீண்ட தேடல் தந்த அயர்ச்சியுடன்
உன்னை பார்கிறேன் - என் மனம்
உரக்க உரைத்தது "இது ஆவதில்லை"
நீ மறுத்திருந்தால் கூட
வியப்பேதும் இல்லாமல்
அடுத்த தேடலுக்கு
நகர்திருப்பேன் - ஆனால்
பிடித்திருக்கிறதாம்
ஒற்றை வார்த்தைக்கு பிறகு
என் காதில் எதுவுமே விழவில்லை
உனக்கு நினைவிருக்கா?
அன்றும் அதன் பிறகு
ஒவ்வொரு முறையும்
அலைபேசியில் நான் கேட்ட
முதல் கேள்வி - உண்மையில்
என்னை பிடித்திருக்கா?
அன்று முதல்
அலைபேசி நிறுவனத்திற்கு - நான்
அதிகம் லாபம் தந்தேன்..
நம் அலைபேசிக்கு உணவு தந்தே
மின்வெட்டை அதிகமாக்கி
விட்டுருந்தது மின்சாரத்துறை
ஒவ்வொரு முறை பேசும்பொழுதும்
ஒரு இளையராஜா பாடலை
உனக்கு இயந்தளித்தேன்...
ஓயாமல் நான் பேசும் பேச்சுக்கு
நீ ஒற்றை வார்த்தையில்
பதிலளிப்பாய் - அதிகபட்சமாய்
"ம்ம்ம்ம்"
போகிறபோக்கில்
கவிதையை சுலபமாய்
உன் காதில் சொன்னது
எனது மனம்
ஒருமுறை நீ கேட்டாய்
எந்த நடிகை பிடிக்குமென்று...
ஐஸ்வர்யா அமோகா
என்று நான்சொல்ல...
பல் கடிபடும் ஓசையுடன் நீ சொன்ன
"அவளுக மட்டும் கைல கிடைத்தால்"
திரையில் பார்த்த காட்சிதான் எனினினும்
தேனாய் இனித்தது...
ஒரே முறை உன்னை சந்தித்தபொழுது
உனக்கொரு அலைபேசி பரிசளித்தேன்
நீயும் ஒரு பரிசளித்தாய் - உன்
உதட்டில் சாயம் பூசி
ஒரு தாள் முழுக்க முத்தமிட்டு...
அன்றுதான் எனக்கு தெரியும் - என்
டிவிஎஸ் 50 கூட பறக்கு என்று....
ஒருமுறை நீயாக அழைத்தாய்
அப்போதுதான் தோன்றியது
ஒருமுறைகூட நீயாக
என்னை அழைக்காதது
மகிழ்ந்து துள்ளியது
மனது - அதை அடக்கியது
கேவி அழும் உன் குரல்
-தொடரும்

Monday, January 26, 2015

மரம் அமைதியை விரும்பினாலும்

இமைகளின் இடையில்
இறுக்கமாய்
பற்றி நிற்கும் சுவறுகள்

இனம் புரிய கவலையின் ஊடே
கடந்து செல்கிறது - இரவு

ஆறுதல் வார்த்தையை
அலைபேசி தொடர்புகளில்
துலவும் மனம்

இதயம் நிராகரிக்கும்
மூளையின் குரலாய்
"இதுவும் கடந்துபோகும் "

உள்ளம் சபிக்கும்
எனது "நேர்மை" -  மரம்
அமைதியை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை

இன்று எனது மணநாள்...

மல்லியும் முல்லையும்
முளைக்க மறுத்த
காய்ந்த கரிசல் பூமியில்
கனிவாய் பூத்த - கார்த்திகை
மலர் அவள்.

குறைகள் நிறைந்தும்
நிறைகள் குறைந்தும்
இருந்த என்னை நிறைவாய் ஏற்றவள்.

என்மகனையும் மட்டுமல்லாமல்
என்னையும் மகனாகி
பாசத்தோடு காதலை
பகிர்ந்தளிப்பவள்

இலக்கிய தலைவிப்போல
காற்றையும் நிலவையும்
தூதாக்கி என்னை
காதலிக்கிறாள்

அமரிக்க வாழ்க்கையை
வெறுக்க செய்வது
தனிமை அல்ல - அவள்
என்னோடு இல்லை என்ற
நிலைமை

நூற்றாண்டு வாழ்வு வேண்டாம்...
வாழும் காலம் மட்டும் நீ எனக்கு
வழித்துணையாய் - என்
விழித்துணையாய் வந்தால் ...
கால் நூற்றாண்டு வாழ்வு போதும்...

தின்னும் தனிமை

ஒருநாள் கூட உன்னிடம்
சொன்னதில்லை  -
மெல்ல தின்னும்
எனது தனிமை

எனது நடுநிசியில் - உனது
அலைபேசிக்கு வரும்
அழைப்பு  - தெரிந்துக்கொள்
எனது தனிமை

தேவையில்லாமல்
நான் போடும்
சண்டை - தெரிந்துக்கொள்
எனது தனிமை

காணொளி அழைப்பில் - நீ
காணும் குருதி குறைந்த முகம்
சுருதி குறைந்த குரல்  - தெரிந்துக்கொள்
எனது தனிமை  

ஒவவொரு முறை
உணவில் நாட்டமில்லை
என சொல்லும்போதும் - தெரிந்துக்கொள்
எனது தனிமை  

ஆனால்
என் தனிமையை
உணரும் ஒவ்வொரு
முறையும் - சேர்ந்தே
உணர்கிறேன் - நீ
உரைக்கும் உன் தனிமையை...

Tuesday, October 11, 2011

பிரிவு



வெற்றிடத்தை கற்று நிரப்புமாம்....
என்னில் வெற்றிடம் இன்றி - நீ
நிரம்பி இருக்கின்றாய்...
உனது நினைவை
வேரோடு அறுக்க முயன்று
தோற்கிறேன் ஒவ்வொரு நாளும்....
தோல்வியின் குருதியாக
கண்ணின் வழி நீராக....

எனக்கு சாவையும் தராமல்
வாழ்வையும் தராமல்
கொல்லாமல் கொல்கின்றன
உன் நினைவுகள்

உன் நினைவுகளை
சுவைத்து சுவைத்து - இதயம்
என் நினைவு கூட இன்றி
போதையில் உள்ளது


முன் பிறவி ஒன்றில் - உனக்கு
ஓர் ஏற்கமுடியாத பாவத்தை
செய்திருப்பேனோ..?
அப் பழி தீர்க்க
என் கண்ணில்பட்டாயோ?

உடலின் துளைகளெல்லாம்
கண்களாய் மாறி
கண்ணீர் விடுகின்றன...
என்னவள் இல்லை - நீ
என்ற நினைவே
உலக தண்டனைக்கெல்லாம்
தலைவனாய் தோன்றுகிறது..

Sunday, August 7, 2011

தேடுதல்



திசைகள் எட்டு மட்டுமாம்?
இன்னுமொரு எட்டு வேண்டுமே....
எட்டோடு பத்தேன்றாலும் இன்னும் சுகமே....
தேவதையை தேடும் வேலை
திசைகளால் களைப்பது இல்லை...

இன்னும் நான்கு கால்கள் வேணும்
திசைக்கு நூறு கண்கள்வேண்டும்...
உன்னில் கூடிகொள்ள மட்டும்
ஒரு உடல் போதும்...
நான் ஒரு உடல் என்றதில்
அறை உடலும் முழு உயிரும் உனதே....
இது நான் தேடும் நீ இல்லை....
நீ தேடும் நீ.....

உன் உயிர் மூட்சினையும்
உடல் வாசனையும் என்
நாசி வழி தேடி
காற்றை வடிகட்டும்
காதலன் நானே...

Thursday, January 20, 2011

ஜீவிதம் 3

என் உணர்வுகளைவிடவும்
உன் உணர்வுகளைவிடவும்
உறவுகள் பெரியதா?

உன்னுடனான வாழ்க்கைதான்
என் வாழ்நாளை கூட்டுமே தவிர
உன் வார்த்தைகள் அல்ல
பிரிவுதான் இறுதி எனில்
என்மேல் பரிவு ஏனடி...

நீ சொல்லும்போது
தெரியாத வேதனை.....
நீ செல்லும்போது தெரியுதடி.....

ஊசி கொண்டு குத்தினாலே
உடையும் என் இதயம் - நீ ஏன்
சொல் ஈட்டி கொண்டு
குத்தினாய்?