லேடீஸ்.. ஆன்சர் மீ
1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக் பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?
2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?
3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா?
4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?
5) ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன். “baba black sheep have u any wool?
6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?
7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?
8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க.ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.
Eppadinka ippadiyellam? Nalla sirichen. Aana kelvikal unmayum kooda. Antha missed cal, thesiya kodi intha randum romba nalla iruku!
ReplyDeleteஅசத்தல்...
ReplyDelete