Pages

Friday, January 22, 2010

இயலாமை













வெறும் வார்த்தைகள்
உயிர் வார்க்குமா ? - ஆம்
வாரமொருமுறை நீ பேசிய
மணித்துளியில்தான் - நான்
வாழ்ந்திருந்தேன்

இப்போதெல்லாம் நான் - உன்னை
விட்டு விலகும் வேகம் அதிகமாகிறது.....
என் உயிர் பிரியும் வேதனையும்.......

பார்க்கும் விழியை -
தன் கரங்களே பறிப்பதுப்போல......
பசித்தவன் கையே உணவை
உதறுவதுபோல.....
இந்த விலகல் விசைக்கு
காரணமும் நான்தானே........

உன்மீதான என் காதலை
உணர்ந்து சொன்னேன்.....
உன்னை பிரிய காரணத்தை
உரக்க சொன்னேன்.....

தாய்க்காக காதலை உதறினால் - அங்கு
வலியுண்டு பழியில்லை.....
காதலிக்காக தாயை உதறினால்
வலியோடு பழியும் உண்டு - என்னிடம்
வலியைதாங்கும் மனதுண்டு
பழியை தாங்கும் மனதில்லை....

இன்று
சூழ்நிலை கைதி நான் - உன்
சூழலையும் கெடுத்துவிட்டேன்- நீ
என் காதலை மறுத்திருந்தால்
உன் காலமாவது சிறந்திருக்கும்

உனக்கு
வேதனையை தந்தும்கூட - எனை
நீ வெறுத்து பார்க்கவில்லை

பிரிகிறேன் என்ற ஒற்றை சொல்லை
பிரியாத புன்னகையில் ஏற்றாய்....நீ
ஓங்கி அறைந்திருந்தால்கூட - நான்
தாங்கியிருப்பேன் -

துளி விழிநீரோடு நீ தந்த
உதிராத புன்னகை
தினமும்
என்னை பிணமாக்கும்......

உயர்வான அன்பின்
உருவகம் நீ - அன்னைக்கு
இனையாக என்னையும் - ஏன்
என் அன்னையையும்
நேசித்தவள் நீ -
இன்னுதான் உணர்கிறேன்....
உன அன்பில் பழுதில்லை - என்னிடம்
அன்பே இல்லை....

உன்னை பிரிய சிந்தித்தபோது - நான்
இந்த வேதனையை
சந்திக்கவில்லை - பிரிந்தபின்னோ
உன்னை தவிர்த்து எதயும்
சிந்திக்க முடியவில்லை....

உண்மையாக உன்னை
பிரியவும் மனதில்லை...
உரிமையோடு உன்னுடன்
இணையவும் வழியில்லை.....
நீ இல்லா வாழ்வை
நினைக்கவும் இயலவில்லை.....

என் மனதில் இருந்து
உன் நினைவை
வழுக்கட்டாயமாக
நீக்க முயல்கிறேன் - ஆனால்
வலியின் மிச்சங்கள்தான்
விழியில் வழிகிறது.....

உன் பாதம் கழுவுமளவு
நீர் வழிந்தால் - என்
கண்ணிரண்டை பிடுங்கி உன்
கால்களில் வைப்பேன்....
ஆனால்
காலம் முழுக்க கழுவினாலும்
பாவம்
கடுகளவும் குறையாதே.....


உன்
காலடி பட்டால்தான் - என்
கல்லறை புனிதமாகும்...
என்றாவது ஒரு நாள - என்
இறப்பை நீ உணர்ந்தால்
மாறாதஅன்போடு - கொஞ்சம்
மலர்தூவு........

3 comments:

  1. உயிரின் உச்சம் தொட்ட வலியல்தான் இப்படி பட்ட வார்த்தைகள் தர முடியும் - கார்த்திகேயன்

    ReplyDelete
  2. நன்றி கார்த்திக்

    ReplyDelete
  3. அழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியது அதனால்,
    கூர்ந்து கவனித்து படித்ததனால் புரிந்தது..!

    ReplyDelete