கண்மணியாய் தமிழிருக்க
காதலித்தர் ஆங்கிலத்தை - ஆம்
மின்னும் நட்சத்திரத்தை
மின்மினி தான் மறைத்து இங்கே
உணவை மருந்தாக
உட்கொண்ட மாநிலத்தில்
மருந்தையே உணவாக
மாற்றிக் கொண்ட பதர்கள் இங்கே.....
மலர் செடியை மலடாக்கி
மகசூல் அதிகம் என
மார்த்தட்டும் கூட்டமிங்கே.....
மாரிக்காலம் பல சென்றால்....
விதை வாங்க - நிலம்
விற்க்க வேண்டும் என
விழங்காத கூட்டமது
தமிழ் வாழ உயிர் கொடுத்தோர்
தமிழ்நாட்டில் சிலர் இருந்தார்
தான் வாழ தமிழ் கெடுக்க
தயக்கமின்றி வருகின்றர்....
அவர் வாழ இடம் கொடுத்து
அடிவருடியாய் நின்று -
தன்மானம் இல்லாத
தரம் கெட்ட கூட்டம் இங்கே....
ஒரு நிமிட உடல் சுவைக்கு - தன்
ஊனை வளர்கின்றான்....
இவனால்
ஊருக்கு உதவில்லை -
இவனுக்கோ
உட்கார நேரம் இல்லை.....
இருந்ததையேல்லாம்
இழத்துவிட்டோம்.... என.
இருக்கும் தன மானத்தையும் -
எடை போட்டு விலையாக்க
இருக்கிறதோர் கூட்டம் இங்கே,,,,,
பரதேசியாய் வந்தவர்கள்
பல்லாண்டு நிலம் ஆள....
பரதேசம் போனவனதான்
பச்சைத்தமிழன்....
பார் ஆள வாய்ப்பிருந்தும்.....
பார் போற்றும் படை இருந்தும்.....
தோள் கொடுக்க ஆளில்லை
போரளியாக என் மக்கள்....
ஆயிராத்தான் அறிவிருந்தும்.....
அனுவின் துணையிருந்தும்.......
எம்மக்கள் சாவிர்க்கு
இங்கிருந்தே ஆயுதமாம்.....
எம்கையை கொண்டிங்கு
எம் கண்னை குத்துகின்றர்
இறையாமை காக்கிறோம் - என்ற
இனிப்பு விசம்தடவி
ஆக்டோபஸ் ஆரியர் - அவர் தம்
ஆதி பகைவனை - என்
அருமைத் தமிழனை
ஆழ்கடலில் தீர்க்கின்றனர்......
வாயிருந்தும் ஊமையிவன்....
வாழ்ந்தென்ன சாதித்தான?
இன்றுவரை விழிக்கவில்லை
இரு விழியும் வெண் புண்னோ.....?
நாவொன்றால் நல் வக்குண்டா?
நாகரிகமான பேச்சுண்டா?
கையிரண்டால் கால் தோழுதான்....
காலிரண்டால் மண்டிட்டான்....
பார் போற்றும் தமிழர் இங்கு
'பார்' போற்றும் தமிழாரானாய்...
(தாய்) நாட்டை தான் காக்கவில்லை
தாயைத்தான் காத்தாயா?
தமிழனாம்.... தமிழன்......
தரங்கெட்ட தமிழன்......
This comment has been removed by the author.
ReplyDeleteதரங்கெட்ட தமிழினதின் செயல்களை மன்னிக்க மனமில்லாமல் பெந்தகாலூர் வந்துளிர்களோ,
ReplyDeleteஎன்னை போல...?